Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்து: மேலும் ஒருவர் பலி

Webdunia
புதன், 13 மே 2020 (07:39 IST)
நெய்வேலியில் உள்ள என்எல்சி 2வது அனல்மின் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒப்பந்த தொழிலாளர் பாலமுருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்தார். 
 
ஏற்கெனவே இந்த விபத்து காரணமாக 8 பேர்கள் தீக்காயம் அடைந்ததாகவும், 2 நிரந்தர தொழிலாளர் உள்பட 3 பேர் இறந்ததாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது. தற்போது பாவாடை, சர்புதீன், அன்புராஜ், சண்முகம், ஜெய்சங்கர், மணிகண்டன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய 7 தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த விபத்து காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் பணமும் தருவதாக என்.எல்.சி நிர்வாகம் உறுதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

கார்கில் போருக்கு நாங்கள்தான் காரணம் .. உண்மையை ஒப்புக்கொண்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

ஒரு மணி நேரத்தில் 98.4 மி.மீ மழை.. கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments