Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊரடங்கு நேரத்தில் குதிரையில் பயணம் செய்த எம்.எல்.ஏ மகன்: போலீசார் விசாரணை

Advertiesment
ஊரடங்கு நேரத்தில் குதிரையில் பயணம் செய்த எம்.எல்.ஏ மகன்: போலீசார் விசாரணை
, செவ்வாய், 12 மே 2020 (18:09 IST)
ஊரடங்கு நேரத்தில் குதிரையில் பயணம் செய்த எம்.எல்.ஏ மகன்
குரானா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் பாஜக எம்எல்ஏ மகன் ஒருவர் குதிரையில் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ நிரஞ்சன் குமார் என்பவரின் மகன் தேசிய நெடுஞ்சாலையில் குதிரையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாஸ்க் கூட அணியாமல் அவர் குதிரையில் பயணம் செய்து கொண்டிருப்பது குறித்து பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர் 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த எம்எல்ஏ நிரந்தர குமார் கூறியதாவது: அந்த வீடியோவில் இருப்பது என் மகன் தான். நெடுஞ்சாலையில் குதிரைப் பயணம் செய்யக்கூடாது என எந்த விதியும் இல்லை. நான் நேற்று பெங்களூரில் இருந்தேன். இன்று தான் மைசூர் வந்தேன். அதனால் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. என் மகன் செய்தது தவறாக இருந்தால், அவரிடம் புரிய வைப்பேன். அவரை காப்பாற்ற மாட்டேன். எது சரி, எது தவறு என எடுத்துக்கூறுவேன் என்று கூறினார்.
 
மேலும் தங்கள் வீடு பச்சை மண்டலத்தில் தான் உள்ளதாகவும், தனது மகன் மட்டுமல்ல அங்கே யாரும் முகக்கவசம் அணியவில்லை என்றும் இருப்பினும் தனது மகன் உட்பட அனைவரையும் தங்கள் அரசு முகக்கவசம் அணிய அறிவுறுத்தியிருப்பதாகவும் குறிப்பிடுள்ளார்.
 
இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ மகனிடம் இதுகுறித்து விசாரணை செய்ய கர்நாடக காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையின் 690 தெருக்களில் கொரோனா!!!