Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் கைது!

Advertiesment
பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் கைது!
, சனி, 26 பிப்ரவரி 2022 (11:45 IST)
பெரியார் வேடமிட்ட குழந்தைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு கைது. 

 
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்திய எபிசோடில் பெரியார் கெட்டப்பில் ஜூனியர் சிறுவர்கள் , பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? கடவுள் மறுப்பு அவரது கொள்கையா? மதத்தை தூக்கியெறியச் சொல்லியது ஏன்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நடித்து அசத்தினர். 
 
இதையடுத்து  தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களை முதல்வர் ஸ்டாலின்  சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிலையில் பெரியார் வேடமிட்ட குழந்தைகளை அடித்து கொன்று 4 முக்கு ரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும். அப்போதுதான் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் பயம் வரும் என்று விஷமத்தனமான கருத்தினை பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் வெங்கடேஷ் குமார் பாபு. 
 
இது போன்று அவதூறு கருத்து வெளியிட்ட கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு மீது குற்ற எண் 100/22 U/s ,153A ,506(1) , IPC SEC  67 IT ACT கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோமனியாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் கிளம்பியது!