Publish Date: Wed, 22 Dec 2021 (14:41 IST)
Updated Date: Wed, 22 Dec 2021 (14:44 IST)
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தான்சான்யா நாட்டில் இருந்து நெல்லைக்கு வந்த நபருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரது மாதிரிகளை ஒமைக்ரான் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Papiksha Joseph
Publish Date: Wed, 22 Dec 2021 (14:41 IST)
Updated Date: Wed, 22 Dec 2021 (14:44 IST)