ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80% பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை என தகவல்.
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் சமீபத்தில் இந்தியாவில் நுழைந்தது என்பதும் படிப்படியாக இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மொத்தம் 200 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80% பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80% பேருக்கு தொற்றுக்கான எந்தக் அறிகுறியும் இல்லை, 13% பேருக்கு லேசான பாதிப்புகளே இருக்கிறது.
ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் பட்சத்தில் அதை சமாளிக்க ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகளுடன் மருத்துவமனைகள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.