Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓலா மற்றும் ஊபர் கால் டாக்சி கட்டணங்கள் உயர்வு

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (12:30 IST)
தமிழகத்தில்  ஓலா மற்றும் ஊபர் கால் டாக்சி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில்  ஓலா மற்றும் ஊபர் கால் டாக்சிகள் பரவலாக இயங்கி வருகின்ற.  இந்த  ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத்தொகை போதுமானதாக இல்லை எனவும், நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும், இந்தக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஆயிரக்கணக்கான வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சென்னையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், இந்தச் செயலிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வரும்  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தினால், இதர வாடகை வாகனங்களின் கட்டணமும் உயரலாம் என கூறப்பட்டது.

இந்த  நிலையில், சென்னையில் கால் டாக்சி ஓட்டுனர்களின் போராட்டத்தால் ஓலா, ஊபர் வாடகை கார்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோயம்பேடு- தாம்பரம் இடையே ஊபர் செயலி கார் வாடகை ரூ.1300 வரை வசூல் செய்யப்படும் எனவும், ஓலா செயலியில் ரூ.600வரை வசூலிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

எடப்பாடி தரப்பில் இருந்து பரப்பப்பட்ட வதந்தி? விஜய் எடுத்த அதிரடி முடிவு..!

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் மறுப்பு!

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments