Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு

Advertiesment
mk stalin
, வியாழன், 12 அக்டோபர் 2023 (12:36 IST)
ஓமன் நாட்டுக் கடல் பகுதியில் மீன் பிடிக்கும்போது உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி  வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
''கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, ஏழுதேசம் சின்னத்துறை மீனவ
கிராமத்தைச் சேர்ந்த மீனவர் திரு. எல்.லெரின்ஷோ, த/பெ. கிளாரன்ஸ் என்பவர்
9-9-2023 அன்று ஓமன் நாட்டின் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது
எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான
செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
 
உயிரிழந்த மீனவர் திரு. எல்.லெரின்ஷோ அவர்களின் குடும்பத்தினருக்கும்,
உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஆய்வு..!