Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பைனான்சியருடன் உல்லாசம்: மரணத்தில் முடிந்த நர்ஸின் கள்ளத்தொடர்பு

Advertiesment
பைனான்சியருடன் உல்லாசம்: மரணத்தில் முடிந்த நர்ஸின் கள்ளத்தொடர்பு
, வியாழன், 8 நவம்பர் 2018 (15:26 IST)
வேலூர் ஏரியில் சிம்.எம்.சி மருத்துவமனையில் பணியாற்றி வந்த நர்ஸ் அனிதா என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை என கருதப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் உண்மை வெளிவந்துள்ளது. 

 
வேலூர் கீழ்மொணவூரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி அனிதா. இவற்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முந்தினம் வீட்டை விட்டு சென்றுள்ளார் அனிதா. பிறகு இவரது சடலம் மட்டுமே கிடைத்துள்ளது. 
 
அனிதாவிற்கு அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் அஜித்குமாருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இந்த நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. தீபாவளி நாளன்று இந்த விவகாரம் கதிரேசனுக்கு தெரியவர், அவர் அனிதாவை கண்டித்துள்ளார். அன்று இருவருக்கும் பெரிய பிரச்சனை நடந்துள்ளது.
 
சண்டை போட்டுவிட்டு கதிரேசன் சென்றவுடன், வீட்டிற்கு பைனான்சியர் அஜித்குமார் வந்துள்ளார். அப்போது அனிதா இனி கள்ளக்காதல் விவகாரம் தொடர வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், இதை கேட்காத அஜித்குமார் அவரை தனியாக அழைத்து சென்று கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து தலைமறைவாகியுள்ள அஜித்குமாரை தேடி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடாத படத்தை ஓட வச்சிராதீங்க: சர்கார் படம் குறித்து டிடிவி தினகரன்