Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியுடன் உல்லாசம்: ஆசிரியரை வெட்டி சாய்த்த சப்-இன்ஸ்பெக்டர்

மனைவியுடன் உல்லாசம்: ஆசிரியரை வெட்டி சாய்த்த சப்-இன்ஸ்பெக்டர்
, திங்கள், 5 நவம்பர் 2018 (12:23 IST)
தூத்துக்குடியில் தனது மனைவியின் கள்ளக்காதலனை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்தூரை சேர்ந்தவர் பிரான்ஸிஸ்(52). இவர் மத்திய ரிசர்வ் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வுபெற்றவர் ஆவார். இவரது மனைவி அந்தோணி பவுலின். இவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
 
இந்நிலையில் அந்தோணி பவுலின் பள்ளியில் தன்னுடன் வேலை பார்த்து வந்த அந்தோணி துரைராஜ் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதனையறிந்த பிரான்ஸில் பலமுறை மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் திருந்தியபாடில்லை.
 
தாயின் கள்ளத்தொடர்பால் மனமுடைந்த அந்தோணி பவுலின் மகள் சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
அந்தோணி துரைராஜால் தான் இவ்வளவு பிரச்சனை, அவனை தீர்த்துக்கட்ட வேண்டும் என சரியான சமயத்தை எதிர்நோக்கி காத்திருந்தார் பிரான்ஸில். அதன்படி தனியாக சிக்கிய அந்தோணி துரைராஜை பிரான்ஸில் சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதில் அந்தோணி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
கள்ளக்காதலால் இரு குடும்பங்கள் சீரழிந்திருப்பது தூத்துக்குடியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த பாஜக தலைவர்