இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்தது. அதன்படி, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தேர்தல் தொடர்பான நோட்டீஸ், சுவரொட்டிகள், அச்சிடுபவர் வெளியிடுபவர் பெயர், முகவரி, கட்டாயம் இடம்பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: துண்டு பிரசுரங்கள், செய்தி அறிக்கைகளில், அச்சிடுபவர் பெயர், முகவரி, கட்டாயம் இடம்பெற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.