Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Sinoj
வியாழன், 25 ஜனவரி 2024 (17:04 IST)
இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய உயிர் நீத்த   மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில்,  'அண்ணா - கலைஞர் - கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது' என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
 
''இந்தி ஆதிக்கமெனும் நெருப்பு தமிழ்நாட்டை உரசாமல் இருக்க, தங்களையே தீக்கிரையாக்கிக் கொண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவாக, தமிழ்நாடெங்கும் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
 
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தி திணிப்பும் - அதற்கெதிரான நம் சீற்றமும், இன்றும் விமான நிலையங்களிலும் - ரயில் நிலையங்களிலும் - அஞ்சல் நிலையங்களிலும் தொடருகின்றன.
 
இன்றைக்கு இந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர்.
 
கடைசி உடன்பிறப்பு இருக்கிற வரைக்கும் - கருப்பு, சிவப்புக் கொடி இந்த மண்ணில் பறக்கிற வரைக்கும் - அண்ணா - கலைஞர் - கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது.
 
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments