Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜகவினர் கைது -அவசரம் காட்டும் திமுக..! அண்ணாமலை ஆவேசம்.!!

பாஜகவினர் கைது -அவசரம் காட்டும் திமுக..! அண்ணாமலை ஆவேசம்.!!

Senthil Velan

, புதன், 24 ஜனவரி 2024 (12:09 IST)
பாஜகவினரைக் கைது செய்வதில் மட்டும் திமுக அரசு அவசரம் காட்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக  தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தொடர்ச்சியாக இந்து மத விரோதப் போக்கில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, நாட்டின் பல கோடி மக்களின் நம்பிக்கை மற்றும் பல நூறு ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய, வரலாற்றுச் சிறப்புமிக்க அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவை, தரக்குறைவாக விமர்சித்த, பொள்ளாச்சி திமுக நிர்வாகியை எதிர்த்து கண்டனக்குரல் எழுப்பிய கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகரத் தலைவர் திரு  @Paramagurubjp, கோவை தெற்கு மாவட்டத் துணைத் தலைவி திருமதி. சாந்தி உள்ளிட்ட  நிர்வாகிகளைக் கைது செய்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 
பொதுமக்களின் அடிப்படை உரிமையான வழிபாடு உரிமைகளையும், இந்து மத நம்பிக்கையையும் புண்படுத்திய திமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் தவறைத் தட்டிக் கேட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்
 
வேங்கைவயல் குற்றவாளிகளையோ, வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை கடுமையாகத் தாக்கித் துன்புறுத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் குடும்பத்தினரையோ கைது செய்யவில்லை என்றும் தமிழகம் முழுவதும் சீர்குலைந்து இருக்கும் சட்டம் ஒழுங்கைக் காக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஆனால், பல கோடி மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்திய திமுகவினரை எதிர்த்து, மக்களின் குரலாகப் போராடிய பாஜகவினரைக் கைது செய்வதில் மட்டும் அவசரம் காட்டுகிறது திமுக அரசு என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஆன்மீக பூமியான தமிழகத்தில், பொதுமக்களின் இறைநம்பிக்கையைத் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு, எளிதில் தப்பித்து விடலாம், எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவி விடலாம் என்ற எண்ணத்தில் இன்னும் திமுக இருந்தால், அதை மாற்றிக் கொள்வது அவர்களுக்கு நல்லது" என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுபானங்கள் விலை ரூ.10 உயர்கிறதா? குடிமகன்கள் அதிர்ச்சி..!