Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Sinoj

, வியாழன், 25 ஜனவரி 2024 (17:04 IST)
இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய உயிர் நீத்த   மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில்,  'அண்ணா - கலைஞர் - கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது' என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
 
''இந்தி ஆதிக்கமெனும் நெருப்பு தமிழ்நாட்டை உரசாமல் இருக்க, தங்களையே தீக்கிரையாக்கிக் கொண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவாக, தமிழ்நாடெங்கும் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
 
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தி திணிப்பும் - அதற்கெதிரான நம் சீற்றமும், இன்றும் விமான நிலையங்களிலும் - ரயில் நிலையங்களிலும் - அஞ்சல் நிலையங்களிலும் தொடருகின்றன.
 
இன்றைக்கு இந்திக்குத் துணையாக சமஸ்கிருதத்தையும் அழைத்து வர முயற்சிக்கின்றனர்.
 
கடைசி உடன்பிறப்பு இருக்கிற வரைக்கும் - கருப்பு, சிவப்புக் கொடி இந்த மண்ணில் பறக்கிற வரைக்கும் - அண்ணா - கலைஞர் - கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது.
 
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய பதிவிடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை- இலங்கை அரசு