ஈரோட்டில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், முண்டாசு கட்டியிருந்ததால் தொண்டர்கள் அடையாளம் தெரியாமல் நடமாடிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
இதற்கிடையில், அவர் கவுந்தம்பாடிக்கு செல்லும் வழியில் சென்னிமலை அடுத்த வரதக்காடு என்ற இடத்தில் தோப்புவீடு ஒன்றினை பார்த்ததும் அங்கு சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகு கிளம்பலாம் என்று கருதி விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது, விஜயகாந்த் வேட்டியுடன், தலையில் முண்டாசு கட்டி இருந்ததால், பலருக்கும் விஜயகாந்தை அடையாளம் தெரியாமல் இருந்துள்ளனர். அப்போது தோட்ட உரிமையாளர் ஏகப்பட்ட கார்களுடன் ஆட்கள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், விசாரிப்பதற்காக அருகில் சென்று பார்த்துள்ளார்.
அப்போதுதான் அங்கு வந்திருந்தது விஜயகாந்த் என்று தெரிந்துள்ளது. இதனை கனவிலும் எதிர்பார்க்காத அவர் இன்ப அதிர்ச்சியடைந்து உள்ளார். பின்னர், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்பு விஜயகாந்த் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.