கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் தலைவர் துரைப்பாண்டியன் கூறியதாவது:-
இதை மாற்றக்கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். புஜா விடுமுறை கணக்கை சரி செய்வதற்காக இப்படி செய்துள்ளார்கள். பொங்கல் பண்டிகை தினத்தை கட்டாயம் விடுமுறை தினமாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் யாரும் அலுவலகத்துக்கு செல்ல மாட்டோம். இதைதான் எங்களால் செய்ய முடியும், என்று கூறினார்.