Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை.. இனி வறண்ட வானிலை தான்..!

Siva
வியாழன், 11 ஜனவரி 2024 (07:47 IST)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவ மழை பெய்தது என்பதும் மிக்ஜாம் புயல் ஏற்பட்டு சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்தது என்பதும் தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புயல், கனமழை, வெள்ளம் ஆகியவற்றை கொண்டு வந்த வடகிழக்கு பருவமழை தற்போது ஜூன் 13ஆம் தேதி நிறைவடைவதாகவும் இனி வறண்ட வானிலையே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் போட்டியா? எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார்? அவரே அளித்த பேட்டி..! 

இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் 13 ஆம் தேதி முதல் வறண்ட வானிலை நிலவும் என்றும் கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை பதிவாகவில்லை என்றும் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாகவும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.  ஆனால் அதே நேரத்தில் கேரள கடலோர பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்  தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments