ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அரசு முகாம்கள் 5 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
இரண்டாம் அலை பீதியால் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
அதன்படி தற்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அரசு முகாம்கள் 5 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான போதிய தடுப்பூசிகளை வழங்காததால், அரசின் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.