Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் - பற்றாக்குறையே காரணம்!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (11:41 IST)
இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என இணையத்தில் வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி அறிவிப்பு. 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததாகவும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தடுப்பூசி தொகுப்புகளை சரியாக தரவில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதன் பின்னர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு இந்த நிலை சீரானது. 
 
இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்று பகல் 12 மணிக்குள் அனைத்து தடுப்பூசிகளும் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். இதனிடையே, தடுப்பூசி பற்றாகுறையால் சென்னையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 
 
சென்னையில் 45, நகர்ப்புறத்தில் 16 என 61 மையத்திலும் தடுப்பூசி கையிருப்பு இல்லை. இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என இணையத்தில் வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. தடுப்பூசி மீண்டும் வந்ததும் தடுப்பூசி போடும் பணி துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments