Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அணில்கள் இல்லையா ? பி எம் கே பாஸ்கரன்

Advertiesment
10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அணில்கள் இல்லையா ?  பி எம் கே பாஸ்கரன்
, வியாழன், 24 ஜூன் 2021 (23:24 IST)
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அணில்கள் இல்லையா !? மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டிக்கு பதிலடி கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பி எம் கே பாஸ்கரன் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொடரும் மின்வெட்டிற்கு, செடி கொடிகளால் மட்டுமல்ல அதன் மேலே ஓடும் அணில் இரண்டு ஒயர்களை உரசுவதால் மின் துண்டிப்பு ஏற்படுவதாகும் அதனால் மின்தடை உருவாகின்றது என்று கூறியிருந்தார். இதற்கு தமிழக அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள தமிழர்கள் நெட்டிசன்கள் அணில்கள் என்ன பாவம் செய்தது என்று கடும் கண்டனத்தை செந்தில் பாலாஜிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர். கரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன், அணில்கள் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தானே இருந்தன அப்போது ஏன் மின்வெட்டு ஏற்படவில்லை என்றும், மின் தடைக்கு அணில்கள் தான் காரணமா என்று கூறியிருக்கிறார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 ஆயிரத்துக்கு சாப்பிட்டு பல லட்சம் டிப்ஸ் கொடுத்த நபர்