Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புனித நீருக்காக இனி காசிக்கு போக வேண்டாம்: நமது ஊரிலே கங்கை நீர் கிடைக்கும்

புனித நீருக்காக இனி காசிக்கு போக வேண்டாம்: நமது ஊரிலே கங்கை நீர் கிடைக்கும்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (14:35 IST)
கங்கை புனித நீரை நாடு முழுவதும் தபால் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யகிறது மத்திய அரசு


 



ஹோமங்கள், பூஜைகளில் கங்கை புனித நீரை பயன்படுத்த வேண்டும் என்று பலர் கருதுகிறார்கள்.  மேலும், காசிக்கு போக வேண்டும், கங்கையில் நீராட வேண்டும் என்பது பெரும் பாலான இந்துக்களின் வாழ்நாள் கனவாக இருக்கிறது.  ஆனால் அவ்வளவு தூரத்துக்கு சென்று வருவதற்கான வாய்ப்பு வசதிகள் இல்லாமல் கனவோடு அவர்களது வாழ்க்கை முடிந்து போகிறது.

இனி அதற்கான கவலை இல்லை. கங்கை புனித நீரை நாடு முழுவதும் தபால் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யகிறது மத்திய அரசு. கங்கை நீர் 500 மில்லி ரூ.35, 200 மில்லி ரூ.25, ரிஷிகேஷ் தண்ணீர் 500 மில்லி ரூ.22, 200 மில்லி ரூ.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா சாலை, ஜார்ஜ்டவுன் ஆகிய 2 தபால் நிலையங்களில் இந்த தண்ணீர் விற்பனையாகிறது.

இன்று காலை விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து பாட்டில்களும் விற்று தீர்ந்து விட்டன. இதேபோல் திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய 7 தலைமை தபால் அலுவலகங்களில் விற்பனைக்காக வந்துள்ளது. கங்கை நீர் கிடைத்ததை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். கங்கைக்கு போக முடியாதவர்கள் தங்களது கனவு நிறைவேறி விட்டதாக சந்தோ‌ஷத்துடன் தெரிவித்தனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் பேசிவிட்டால் போலீசாருக்கு சிக்கல் : எவிடென்ஸ் அமைப்பு கதிர் பகீர் தகவல்