Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம்குமார் பேசிவிட்டால் போலீசாருக்கு சிக்கல் : எவிடென்ஸ் அமைப்பு கதிர் பகீர் தகவல்

ராம்குமார் பேசிவிட்டால் போலீசாருக்கு சிக்கல் : எவிடென்ஸ் அமைப்பு கதிர் பகீர் தகவல்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (14:26 IST)
தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கில், உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க, மதுரையை சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பு களம் இறங்கியுள்ளது.


 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம் பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், இந்த கொலையை ராம்குமார் செய்யவில்லை என்றும், கைது முயற்சியின் போது போலீசார்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்தனர் என்றும், உண்மை குற்றவாளியை போலீசார் காப்பாற்ற முயல்கின்றனர் என்றும் ராம்குமாரின் வக்கீல் ராம்ராஜ் பரபரப்பு புகார்களை கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கில் ஏராளமான மர்மங்களும், சந்தேகங்களும் எழும்புவதாக சில வழக்கறிஞர்கள் கருத்து கூறி வருகின்றனர். சுவாதி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
 
இந்நிலையில், இந்த கொலை வழக்கு குறித்து விசாரிக்க, மதுரை எவிடென்ஸ் அமைப்பு களம் இறங்கியுள்ளனர். அந்த அமைப்பை நடத்தி வரும் கதிர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
“சுவாதி வழக்கை, வேக வேகமாக முடிக்கவே போலீசார் விரும்புகின்றனர். ராம்குமார் பேசிவிட்டால் சிக்கல் ஏற்படும் என்பதால் சிறையில் ஏராளமான கெடுபிடி செய்கிறார்கள். இந்த வழக்கில், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.

webdunia

 

 
ஆனால், ராம்குமார் மட்டும்தான் குற்றவாளி என காவல்துறை அதிகாரிகள் அவசரம் அவசரமாக இந்த வழக்கை முடிக்க நினைக்கின்றனர். உண்மையில் அவர்தான் குற்றவாளி என்றால், அவருக்கு கடுமையான தண்டனையை நீதித்துறை வழங்கட்டும். ஆனால், அதற்குள்ளாகவே, காவல்துறைக்கு முதல்வர் பாராட்டுப் பத்திரம் வழங்க வேண்டிய அவசியம் என்ன? விரைவாக விசாரணை நடத்தினால் மட்டுமே, போலீஸாரின் கை ஓங்கும் என்பதால் வழக்கை அவசரப்படுத்துகின்றனர்.
 
ராம்குமாரை கைது செய்ய செங்கோட்டை போலீசார் செல்லவில்லை. தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன்தான் சென்றிருக்கிறார். ராம்குமார் கழுத்து அறுபட்டு, மயங்கிய நிலையில் இருந்த போதுதான், அவரின் தந்தை பரமசிவத்திடம் போலீசார் காட்டியுள்ளனர். முக்கியமாக ராம்குமாரிடம் அப்போது எந்த பிளேடும் இல்லை.
 
மேலும், சுவாதி கொலை நடந்த அன்று இரவு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டார் ராம்குமார். இதுபற்றி அவரது தந்தையிடம் கேட்டதற்கு  “அவன் என்னிடம் பணம் வாங்குவதற்காக அடிக்கடி ஊருக்கு வருவான். அன்றும் அது போல்தான் வந்தான்” என்று கூறுகிறார்.
 
முக்கியமாக, சம்பவம் நடந்த ஒரு வாரமும் ராம்குமாரின் செயல்பாட்டில் எந்த வித்தியாசமும் இல்லை. அவர் இயல்பாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். ராம்குமாரிடமிருந்து சுவாதியின் செல்போனை  கைப்பற்றியதாக போலீசார் கூறுவது பொய். அப்படி எந்தப் போனும் அவரிடம் இல்லை. 
 
ராம்குமாரை கைது செய்த பிறகு மூன்று நாளுக்குப் பின், அவரின் தங்கையிடம் இருந்து ஒரு கைப்பையை போலீஸார் எடுத்துக் கொண்டு போயுள்ளனர். இதற்கு ராம்குமாரின் தங்கை எதிர்ப்பு காட்டியுள்ளார். ‘வீடியோவில் உள்ள பை இதுதான். இந்த பையில்தான் ராம்குமார் அரிவாளை வைத்திருந்தான்’ எனக் காட்டுவதற்காகவே, போலீஸார் அந்த பையை கைப்பற்றியுள்ளனர். 
 
கொலையை நேரில் பார்த்தவர்கள் ‘அந்தக் கொலையாளி பிடிபட்ட ராம்குமார் அல்ல’ என்று கூறுகிறார்கள். அப்படியானால் ‘சுவாதி கொல்லப்பட வேண்டும்’ என எண்ணிய நபர்கள் யார்?... அவர்களோடு ராம்குமார் நட்பில் இருந்தாரா என்பது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ஒருவர் மட்டுமே குற்றவாளி என இறுதி முடிவுக்கு போலீஸ் வந்தது தவறு என்றுதான் சொல்கிறோம். கொலையில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமும். எனவேதான் அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறுமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு தண்டனையா?