Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி மழையே கிடையாது? கொளுத்த வருகிறது அக்னி நட்சத்திரம்..! - வெப்பம் எப்படி இருக்கும்?

Prasanth Karthick
திங்கள், 28 ஏப்ரல் 2025 (08:59 IST)

தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் வெப்பத்தின் உச்சக்கட்ட காலமான அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் மார்ச் இடைக்காலம்  முதலாகவே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியிருந்தாலும் இடையே பல பகுதிகளில் நல்ல மழை பெய்து பூமியை குளிர்வித்து வந்தது. தற்போதும் நேற்று முதலாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. 

 

கோடைக்காலத்தில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் காலமானது உச்ச வெப்பநிலையை அளிக்கும் காலமாக உள்ளது. இதை கத்திரி வெயில் என்றும் கூறுவர். இந்த நாட்களில் வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த ஆண்டு கத்தரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது ஆங்காங்கே பெய்து வரும் மழையும் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் வெப்பநிலை மெல்ல அதிகரிக்கத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலும் தங்க முடியவில்லை, பாகிஸ்தானுக்குள் செல்லவும் அனுமதி இல்லை: 2 குழந்தைகளுடன் பெண் தவிப்பு..!

தீர்ப்பு கூட எழுத தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி: உயர்நீதிமன்ற நீதிபதியின் அதிரடி நடவடிக்கை..!

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு! யாருக்கு அந்த இலாகாக்கள்?

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அடுத்த கட்டுரையில்
Show comments