தமிழகத்தில் டெங்கு பாதிப்பும் எதுவும் இல்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி கோயிலில் அமைச்சர் கருப்பண்ணன் தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் ஏழுமலையான் அருளால் எல்லோரும் நலமாக இருக்கின்றனர். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
டெங்கு காய்ச்சல் குறித்து தமிழக அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் அமைச்சர் இதுபோன்ற கருத்தை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.