Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெங்கு ஆய்வு கூட்டம் ; கலெக்டர் பேசிக்கொண்டிருக்க கோலம் போட்ட அதிகாரி

டெங்கு ஆய்வு கூட்டம் ; கலெக்டர் பேசிக்கொண்டிருக்க கோலம் போட்ட அதிகாரி
, வியாழன், 26 அக்டோபர் 2017 (11:05 IST)
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கு கொண்ட டெங்கு தடுப்புக் கூட்டத்தில் அதிகாரி ஒருவர் கோலம் போட்டுக்கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகமாக உள்ளது. தினந்தோறும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக சேலம், சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலில் ஏராளமனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
எனவே, டெங்குவை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், அமைச்சர் விஜயபாஸ்கர் மறும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், டெங்கு ஒழிப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
 
அப்போது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண் அதிகாரி, டெங்கு தடுப்பு குறித்த ஆலோசனைகளை கவனிக்காமல், குறிப்பெடுப்பதற்காக கொடுக்கப்பட்ட காகிதத்தில் கோலமிட்டுக் கொண்டிருந்தார். அருகிலிருந்து பெண் அதிகாரி குறிப்பிடுத்துக் கொண்டிருந்தாலும், அவர் எதையும் கவனிக்காமல், கோலம் போடுவதிலேயே குறியாக இருந்துள்ளார்.
 
தமிழகமெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வரும் நிலையில், டெங்கு தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் ஒரு அரசு அதிகாரி இப்படி அலட்சியமாக கோலம் போட்டுக்கொண்டிருந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் திருச்சியில் பேனர்கள்: சென்னை ஐகோர்ட் அதிரடி