டிகிரி படித்து வரும் சில மாணவர்கள் அரியர் இருந்தால் அவற்றை முடிக்க வருடக்கணக்கில் கால அவகாசம் எடுத்து கொள்வதுண்டு. இந்த நிலையில் இனிமேல் 7 ஆண்டுகளுக்குள் அரியரை முடிக்க வேண்டும் என்றும், 7 ஆண்டுகளுக்கு மேல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் கிடையாது என்றும் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதனால் 7 ஆண்டுகளுக்கும் மேலாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இனிமேல் டிகிரி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை 7 ஆண்டுகள் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பாக வரும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாத தேர்வுகளில் அவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும், ஆனால் இதுவே அந்த மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பல அரியர்கள் வைத்துள்ள மாணவர்கள் ஒவ்வொன்றாக எழுதி என்றாவது ஒருநாள் டிகிரி வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தின் மீது மண் விழுந்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு ஆரோக்கியமான கல்வி முறைக்கு தேவைதான் என்று கல்வி அறிஞர்கள் கூறி வருகின்றனர்.