Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 வயது வரை அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை!

Advertiesment
5 வயது வரை அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை!
, வியாழன், 5 மே 2022 (15:54 IST)
5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு. 

 
தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலுரை ஆற்றி வருகிறார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு...

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து மே 12 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும்.
 
அதோடு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது. தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரைக் கட்டணத்தில் பயணசீட்டு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்பட்டு வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங். எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதம் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு