Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச தடை நீக்கம்: மயிலாடுதுறை கோட்டாட்சியர் அறிவிப்பு

Advertiesment
dharmapuram
, ஞாயிறு, 8 மே 2022 (16:30 IST)
தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பெற்று வந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தருமபுர ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படுவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டிருந்தார் 
 
இந்த உத்தரவுக்கு தருமபுரம் ஆதின தரப்பிலிருந்தும் பாஜக தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. தடை இருந்தாலும் தடையை மீறி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்துவோம் என பாஜகவினர் கூறினார் 
 
இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் உள்ள ஆதினங்கள் தமிழக முதல்வரை சந்தித்த பிறகு தருமபுரம் ஆதின பட்டணப் பிரவேச விதிக்கப்பட்டிருந்த தடை வாய்மொழியாக நீக்கப்பட்டதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் தருமபுரம் ஆதின பட்டினபிரவேசத்திறி விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து வரும் 22ஆம் தேதி தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கி வைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.1.14 இலட்சம் கோடியை இழந்தது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்: என்ன காரணம்?