Publish Date: Thu, 28 Sep 2023 (10:51 IST)
Updated Date: Thu, 28 Sep 2023 (10:52 IST)
பாராளுமன்ற தேர்தலில் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற்றப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்போம் என்று கேபி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்றும் நாடாளுமன்ற மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலில் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
2 கோடி தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து பாஜகவுடன் ஆன கூட்டணி முறிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.