அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜக தனியாக ஒரு மெகா கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணியில் தினகரன் கட்சி, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜகவிலிருந்து அழைப்பு வந்ததா பாஜக கூட்டணிகள் இணைவீர்களா என்று கேள்விக்கு தக்க நேரத்தில் சரியான முடிவு எடுப்போம் என்று தெரிவித்தார்.
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அந்த சூழ்நிலையை பொறுத்து யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வோம் என்றும் இப்போதே எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் அவர் பாஜக கூட்டணி இணைய தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.