Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசமான வானிலை: தமிழகத்தில் 24 விமான சேவைகள் ரத்து!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (08:27 IST)
தமிழகத்தில் 24 விமான சேவைகள் அடுத்தது ரத்து 
 
நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில் சேவையும் இன்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டதாக தென்னிந்திய தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் இரு மார்க்கங்களிலும் இன்று ரயில்கள் இயங்காது என்றும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களுடைய கட்டண தொகை திருப்பி செலுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் நிவர் புயலால் வானிலை மோசமடைந்ததையடுத்து இன்று  தமிழகத்தில் மட்டும் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லக்கூடிய விமானம் , திருச்சி இருந்து சென்னை வரும் 5 விமானங்கள், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் 5 விமானங்கள் என மொத்தம் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments