வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த பகுதியில் தேசிய மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் நிறுத்தப்படும் என்றும் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது
தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் இணைந்து நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி அருகே உள்ள ஆகியோர்களிடம் புயல் குறித்து ஆலோசனை செய்தார். இதனை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தமிழில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.
அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உடன் பேசினேன். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன்