கரூர் வந்தது ஏன்? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

Mahendran
திங்கள், 29 செப்டம்பர் 2025 (16:02 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு வருகை தந்து, கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்தபோது, "என்னால் அவர்களிடம் பேசக்கூட முடியவில்லை. அவர்கள் பேசுவதை கேட்டாலே நெஞ்சடைத்தது," என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற மட்டுமே வந்ததாகவும், இதில் வேறு எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
"நான் இங்கே வந்தது மாநில அரசு என்ன செய்தது, விசாரணை ஆணையம் என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அல்ல. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுமாறு பிரதமர் மோடி சொன்னார். அதற்காகத்தான் வந்துள்ளோம்," என்று அவர் கூறினார்.
 
"என்னையும் அமைச்சர் முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். அவர் வர விரும்பினாலும் வர முடியாத சூழலால் எங்களை அனுப்பி வைத்தார்," என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
"வேதனையைக் கூறிக்கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை," என்றும், பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமர் மோடியிடமும் உள்துறை அமைச்சரிடமும் தெரிவிப்பேன் என்றும் அவர் பேட்டியில் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் கூட்டநெரிசல்: வீடியோ ஷேர் செய்தவர்களை தேடி வரும் காவல்துறை?

கரூரில் சதி நடந்திருந்தால் மூடி மறைச்சிடுவாங்க! சிபிஐ விசாரணை வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

டெல்லியில் அதிகாலை நடந்த கோர விபத்து.. 12 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி..!

தவெக தொண்டர்களை காவலர்கள் தாக்கிய வீடியோ ஆதாரம் உள்ளது! - தவெக வழக்கறிஞர்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடத்த கூடாது: கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments