நிர்மலாதேவி விவகாரம்: ஆளுனர் அமைத்த குழுவுக்கு தடையில்லை: நீதிமன்றம் அதிரடி

Webdunia
புதன், 9 மே 2018 (13:06 IST)
அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி மற்றும் ஆளுனர் அமைத்த சந்தானம் தலைமையிலான குழு ஆகிய இரண்டு குழுக்கள் ஒரே நேரத்தில் விசாரணை செய்து கொண்டிருக்கின்றது.
 
இந்த நிலையில் ஆளுனர் அமைத்த சந்தானம் தலைமையிலான குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
 
இந்த மனுவை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் நியமித்துள்ள சந்தானம் குழுவுக்கு தடைவிதிக்க முடியாது என்றும் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து சந்தானம் தலைமையிலான குழு தங்கள் விசாரணையை தொடர எந்தவித தடையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் பிரபலமான ஐஐடி பாபா.. ஆன்மீகம் - தியானம் பல்கலைகழகம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிப்பு..!

இலவசமாக ஏஐ படிப்புகளை வழங்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.. எப்படி விண்ண்ப்பம் செய்வது?

பெங்களூரு சாம்பார் > சென்னை சாம்பார்.. Zomatoவின் கிண்டல் பதிவு.. செயலியை டெலிட் செய்யும் சென்னைவாசிகள்..!

ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும், அது நாளையாக கூட இருக்கலாம்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

அடுத்த கட்டுரையில்
Show comments