Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நிபா வைரஸ்? குழப்பத்தில் மருத்துவர்கள்

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (16:22 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் நிபா வைரஸ் தொற்று சிலருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.

கடந்த வருடம் கேரளாவில் நிபா வைரஸ் தொற்றினால் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த வருடமும் கேரளாவில் நிபா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் எர்ணாகுளத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்த பாண்டிசேரியை சேர்ந்த ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.

எவ்வளவு சிகிச்சை எடுத்தும் சரியாகததால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால், அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர்.

ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்களால் ஒரு சரியான முடிவுக்கு வர முடியவில்லை. இருந்தாலும் அவரை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது இரத்த மாதிரிகளை ஆய்வுக்காக புனே தேசிய பரிசோதனை மையத்துக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவுகள் தெரிய வரும்போதுதான் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவி வருகிறதா என்ற கேள்விக்கு பதிலும் கிடைக்கும்.

இப்போது கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மக்களும் நிபா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments