Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சென்னையில் என்.ஐ.ஏ சோதனை!

Mahendran
செவ்வாய், 5 மார்ச் 2024 (10:59 IST)
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சென்னை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்திய குற்றவாளி தமிழகத்தில் பதுங்கி இருக்கலாம் என்று வெளியான தகவலை அடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு ஏஜென்சி என்.ஐ.ஏ மற்றும் பெங்களூரு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில்  இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளி தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.

மேலும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் குண்டு வெடித்த இடத்தில் சோதனை செய்ததாகவும் இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது



Edited by

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments