Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம்! மக்கள் பாதிப்பு

water dry

Sinoj

, சனி, 2 மார்ச் 2024 (20:00 IST)
பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக  அம்மாநில துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான  காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக  அம்மாநில துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
பெங்களூரில்   நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, தண்ணீர் டேங்கர் லாரிகளை கையகப்படுத்தி  மாநில அரசு  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
 
 மா நிலத்தில் நிலவுகின்ற தண்ணீர் பஞ்சத்தை நிவர்த்தி செய்ய கர்நாடக அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தண்ணீர் பஞ்சத்தை தடுக்க உதவியாக அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலவசங்களால் அரசின் கஜான காலி- நடிகர் சரத்குமார்