Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு பயங்கரவாதி தமிழகத்தில் பதுங்கலா? தீவிர வேட்டை

cafe restaurant,

Siva

, ஞாயிறு, 3 மார்ச் 2024 (10:21 IST)
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே ஹோட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளி தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு ஏஜென்சி என்.ஐ.ஏ மற்றும் பெங்களூரு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

மேலும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் குண்டு வெடித்த இடத்தில் சோதனை செய்ததாகவும் இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒன்றில் இருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் மூன்று மாநிலங்களில் தீவிர தேடித்தான் வேட்டை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்! - சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு !