Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணம் முடிந்த கையோடு போராட்டத்தில் பங்கேற்ற இளம் ஜோடிகள்!

Advertiesment
திருமணம் முடிந்த கையோடு போராட்டத்தில் பங்கேற்ற இளம் ஜோடிகள்!
, வெள்ளி, 20 ஜனவரி 2017 (12:12 IST)
கோவை வ.உ.சி. பூங்காவில் திருமணம் முடிந்த கையோடு ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் பங்கேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

மெரினாவில் இன்று நான்காவது நாளாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

webdunia

 

இந்நிலையில், புதுமண ஜோடி ஒன்று திருமணம் முடிந்த கையோடு கோவை வ.உ.சி. பூங்காவில் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்றன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவசர சட்டம்; முதல்வர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்!