சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

Mahendran
செவ்வாய், 3 ஜூன் 2025 (09:22 IST)
மொரிஷியஸ் ஸ்நாட்டில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த, பிறந்து 8 நாளாகிய குழந்தை விமானத்திலேயே உயிர் இழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மொரீஷியஸ் நாட்டில் பிறந்த குழந்தைக்கு இருதயப் பிரச்சனை இருந்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து, மொரீஷியஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு இருதயச் சிகிச்சைக்காக அந்த குழந்தை, அதன் பெற்றோர்களால் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டது.
 
இந்த நிலையில், விமானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போதே அந்த குழந்தை உயிரிழந்ததாக தெரிகிறது. இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
 
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், குழந்தை உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த குழந்தையின் பெற்றோர் மோனிஷ் குமார் மற்றும் பூஜா ஆகியோர் சென்னை வந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் தங்கள் இறந்த குழந்தையுடன் மொரீஷியஸ் நாட்டுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments