புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் நாளை இருக்கும் முதல் போக்குவரத்துக்கு தடை என போலீசார் அறிவித்துள்ளனர். 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் ஏராளமான உற்சாகமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது
	 
	இந்த நிலையில் நாளை டிசம்பர் 31ஆம் தேதி இரவு சென்னை மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் என்பதால் காமராஜர் சாலை ராஜாஜி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 
	 
	மேலும் நாளை இரவு புத்தாண்டை முன்னிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாலை விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் போக்குவது போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.