அமலுக்கு வந்த புதிய வன்கொடுமை தண்டனை சட்டம்! - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 28 ஜனவரி 2025 (19:06 IST)

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு தண்டனையை அதிகரித்த புதிய சட்டம் திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் புதிய சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கொண்டு வந்த நிலையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து உடனடியாக அந்த சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

 

இந்த சட்டத்தின் படி பாலியல் குற்றத்தில் முதல் முறையாக ஈடுபடுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை தண்டனை தொடங்கி குற்றங்களுக்கு ஏற்ப மரண தண்டனை, ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
 

இந்த புதிய தண்டனை சட்டம் ஜனவரி 25 முதலே தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துவிட்டதாக தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இனி தமிழ்நாட்டில் பாலியல் குற்ற சம்பவங்களுக்கு இந்த புதிய சட்டத்தின் படியே தண்டனைகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்