Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியை கைவிடும் இந்தியா கூட்டணி.. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு..!

Siva
செவ்வாய், 28 ஜனவரி 2025 (18:48 IST)
டெல்லியில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகள் போட்டியிடும் நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு பிரச்சாரமும் செய்து வருகிறது. இதனை அடுத்து இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை மற்ற கட்சிகள் கைவிட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சமாஜ்வாதி ஜனதா கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு என்று அறிவித்துள்ளது என்பதும், அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் பேரணியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் பொதுக்கூட்டத்திலும் இருவரும் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அக்கட்சியின் எம்பி சத்ருகன் சிங் கா டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு என்று தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி ஜனவரி 30 ஆம் தேதி அவர் டெல்லியில் பிரச்சாரத்தையும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் இதுவரை பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கவில்லை என்பதால் அக்கட்சியை இந்தியா கூட்டணி கைவிட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

120 நாட்கள் நீருக்குள் வாழ்ந்த ‘கடல் ராசா நான்’! ஜெர்மனி முதியவர் கின்னஸ் சாதனை!

அமெரிக்காவில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்? பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பில் என்ன நடக்கும்?

தனியார் வானிலை ஆர்வலர்கள் வானிலை கணிப்புகளை வெளியிடக்கூடாது: சென்னை வானிலை ஆய்வு மையம்

இரவு 11 முதல் காலை 11 மணி வரை சிறுவர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

அம்மா உணவகங்களில் மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கலாமே? அண்ணாமலை யோசனை

அடுத்த கட்டுரையில்
Show comments