வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்!

Prasanth K
வியாழன், 23 அக்டோபர் 2025 (13:04 IST)

தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்ததால் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்தது.

 

இந்நிலையில் இது மேலும் வலுவடையாது என்றும், வலு குறைந்து ஆந்திரா - தமிழகம் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதை தொடர்ந்து நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் மீண்டும் மழைப்பொழிவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு.. ஆனால் தேஜஸ்வி படம் மட்டும்.. பாஜக கிண்டல்..!

மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க முடிவு! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

அடுத்த கட்டுரையில்
Show comments