Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

Advertiesment
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு

Mahendran

, வியாழன், 23 அக்டோபர் 2025 (11:32 IST)
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புதன்கிழமை பிற்பகல் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது வலுப்பெறாமல் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையைக் கடக்கும் என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வடக்கு உள் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்துள்ளது.
 
இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, இது வடக்கு உள் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு உள் கர்நாடகப் பகுதிக்கு மேலே மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் இது, அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு உள் கர்நாடகத்தில் மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!