Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்பா & மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு புதிய நிபந்தனைகள் !!

Advertiesment
ஸ்பா & மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு புதிய நிபந்தனைகள் !!
, புதன், 1 ஜூன் 2022 (11:01 IST)
ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்களுக்கு அனுமதி வழங்க புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

 
மசாஜ், ஸ்பா போன்ற இடங்களில் முறைகேடுகள் நடைபெறுவதை அடுத்து ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்களுக்கு அனுமதி வழங்க புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இவற்றின் விவரம் பின்வருமாறு... 
1. கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது. 
2. CCTV கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.
3. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக் கூடாது.
4. வாடிக்கையாளர்களுக்கு என தனி வருகை பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும்.
5. எந்த வகையிலும் பாலியல் தொழில் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கு தடை.
6. நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது.
7. பக்க விளைவுகள் ஏற்படுத்த கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது.
8. ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர் பணியாளர் தனது கையினை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். 
9. ஒருவருக்கு சேவை வழங்கிய பின் அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன் கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
10. உரிமம் விண்ணப்பிக்கும் நபர் உரிய படிப்பு படித்திருக்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்கிறதா? இண்டிகோ சி.இ.ஓ பேட்டி