Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மினி பேருந்துகளுக்கான புதிய கட்டணம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Advertiesment
Mini Bus

Siva

, செவ்வாய், 28 ஜனவரி 2025 (16:57 IST)
தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் மினி பேருந்துகளுக்கான கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்து வரும் நிலையில் மினி பேருந்துகளுக்கு கட்டணம் பல ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்ட கட்டண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த கட்டணம் மே ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதல் 4 கிலோமீட்டர் வரை 4 ரூபாய், 4 முதல் 6 கிலோமீட்டர் வரை 5 ரூபாய், 6 முதல் 8 கிலோமீட்டர் வரை 6 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மினி பேருந்துகளை பெரும்பாலும் கிராம பகுதியில் உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்தி வரும் நிலையில் இந்த கட்டண  உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜரான கதிர் ஆனந்த் எம்பி..