ஓலா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்... ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பு..!
ஓலா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்ததை அடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பூங்காவில் 7,614 கோடி ரூபாய் முதலீட்டில் ஓலா நிறுவனம் புதிய ஆளை அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுடன் செய்துள்ளதை அடுத்து சுமார் 3,111 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஓலா நிறுவனம் அமைக்க இருக்கும் புதிய ஆலை காரணமாக வேலூர் சுற்றுலா வட்டாரத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஓலா மட்டுமின்றி சிப்காட் தொழில் பூங்காவில் inox air products நிறுவனத்தின் அதி உயர்ஃத தூய்மையான திரவ மருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலையும் துவங்கப்பட உள்ளது. சென்னையில் நிறுவப்பட்டு உள்ள ஜிஎக்ஸ் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றையும் சென்னையிலிருந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.