Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் பணி! – தமிழக அரசு அறிவிப்பு!

Advertiesment
போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் பணி! – தமிழக அரசு அறிவிப்பு!
, வியாழன், 16 பிப்ரவரி 2023 (10:17 IST)
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுனர், நடத்துனர் காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் பேருந்துகளுக்கான அரசு நடத்துனர், ஓட்டுனர் பலர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) சுமார் 1484 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களும், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் 222 ஓட்டுனர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இதில் 122 ஓட்டுனர் பணியிடங்கள், 685 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் (Drivver cum conductor) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பணியிடங்கள் நிரப்புவது குறித்து செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடவும், விண்ணப்பங்களை இணையவழியாக மட்டுமே பெறவும் அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான நபர்களின் பட்டியலையும் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் கல்வித் தகுதி, வயது, சாதி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் தகுதி திறன் ஆகியவற்றை கொண்டும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! – அம்பலமான ஆதரவற்றோர் ஆசிரமத்தின் அக்கிரமங்கள்!