Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Prasanth Karthick
வெள்ளி, 31 ஜனவரி 2025 (15:26 IST)

சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சென்னை, தாம்பரம் பகுதிகளில் பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பணிநிமித்தமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் ஊர்களுக்கு செல்ல சென்னை, தாம்பரத்திலிருந்து முக்கிய வெளியேறும் வழியாக ஜிஎஸ்டி சாலை அமைந்துள்ளது. இதனால் வார இறுதிகளிலும், வார தொடக்க நாட்களிலும் ஜிஎஸ்டி சாலை கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறது.

 

கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்கனவே தாம்பரம் - வண்டலூர் இடையே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் வண்டலூர் தாண்டி சிங்கபெருமாள் கோவில் வரையே தற்போது தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினையை சரிசெய்ய கிளம்பாக்கம் முதல் மஹிந்திரா சிட்டி இடையே ரூ.3500 கோடி மதிப்பீட்டில் 18.6 கி.மீ தூரத்திற்கு 6 வழி உயர்மட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI திட்டமிட்டுள்ளது.

 

இந்த உயர்மட்ட சாலையில் ஐயஞ்சேரி சந்திப்பு, காட்டாங்குளத்தூர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் Entry, Exit பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த புதிய உயர்மட்ட சாலையால் போக்குவரத்து பிரச்சினை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்.. இதுதான் திராவிட மாடல் அரசா? அன்புமணி கேள்வி

காந்த ஏற்றுமதியில் சீனா வைத்த ட்விஸ்ட்! இந்தியாவில் 21 ஆயிரம் வேலைகள் ஆபத்தில்?

இந்த கொசு கடிக்காது.. உளவு பார்க்கும்.. சீனாவின் அதிர்ச்சியான கண்டுபிடிப்பு..!

போதை பொருள் விவகாரத்தில் இன்னொரு தமிழ் ஹீரோவுக்கு தொடர்பா? சம்மன் அளிக்க திட்டம்..!

எடப்பாடியார் கோவப்பட்டால் வேற மாதிரி ஆயிடும்! - பாஜகவுக்கு ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments