முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் ₹208 கோடி மதிப்பில் 120 மின்சார பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் பயணிகளுக்கு பெரும் பாதுகாப்பாகவும், கூடுதல் வசதிகளுடனும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் பேருந்துகளுக்குரிய கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்த பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணம் கிடையாது என்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், சிங்கார சென்னை கார்டு வைத்திருக்கும் பயணிகளும் இந்த மின்சார பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran